12. மானக்கஞ்சாற நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 12
இறைவன்: பஞ்சவடீஸ்வரர்
இறைவி : கல்யாணசுந்தரி
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : வேளாளர்
அவதாரத் தலம் : ஆனந்ததாண்டவபுரம்
முக்தி தலம் : ஆனந்ததாண்டவபுரம்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : மார்கழி - சுவாதி
வரலாறு : கஞ்சாறூர் என்னும் தலத்தில் அவதாரம் செய்தவர். தன்னுடைய மகள் மணப்பருவம் அடைந்ததும் அவளை ஏயர்கோன் கலிக்காமர் என்னும் நம்பிக்குத் திருமணம் செயவிக்க முடிவு செய்தார். திருமண நாளும் வந்தது. நிகழ்ச்சிக்கு சிவபெருமான் ஒரு மாவிரதியார் வேடம் கொண்டு வந்து என்ன நிகழ்ச்சி இது என வினவ நாயனாரும் தன் மகளுக்குத் திருமணம் என்று சொல்லி மணமகளை வாழ்த்துமாறு கூறி மகளை அழைத்தார். மணமகளின் கூந்தலின் வனப்பைக் கண்ட விரதியார் இவள் கூந்தல் நம் பஞ்சவடிக்கு (மார்பில் அணியும் திருநூல்) உதவும் என்றார். அது கேட்ட நாயனார், மணமகள் என்றும் பாராமல் தம் மகள் என்றும் பாராமல் அடியார் கேட்டார் என்றவுடன் வாள் கொண்டு அக்கூந்தலை அரிந்து விரதியார் கையில் கொடுத்தார். நாயனாரின் பக்தியைக் கண்ட எம்பெருமான் விடையின் மேல் காட்சி கொடுத்து அருள் புரிந்தார். மணமகளின் கூந்தலும் முன்போல் வளர்ந்தது. நடந்த நிகழ்வுகளையெல்லாம் கேட்ட மணமகன் மிகவும் மகிழ்ந்து அப்பெண்ணைத் திருமணம் செய்து தம் ஊர் திரும்பினார்.
முகவரி : அருள்மிகு. பஞ்சவடீஸ்வர சுவாமி திருக்கோயில், ஆனந்ததாண்டவபுரம், (நீடூர் வழி) – 609103 மயிலாடுதுறை வட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திரு. வை.ஜகதீச சிவாசாரியார்
தொலைபேசி : 04364-2422127
ஜெ.தண்டபாணி சிவாசாரியார் - 9442058137, 9486032325

இருப்பிட வரைபடம்


மாறில் பெருஞ்செல்வத்தின் வளம் பெருக மற்றதெலாம் 
ஆறுலவுஞ் சடைக் கற்றை அந்தணர் தம் அடியாராம் 
ஈறில் பெருந் திருவுடையார் உடையார் என்றியாவையுநேர் 
கூறுவதன்முன் அவர் தங்குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார்

- பெ.பு. 879
பாடல் கேளுங்கள்
 மாறில்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க